ஏலகிரி அடிவாரத்திலிருந்து பொன்னேரி வரை நான்கு வழிச்சாலை பணிகள் தொடக்கம்

ஏலகிரி மலை அடிவாரத்திலிருந்து பொன்னேரி வரை உள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கியது.
நெடுஞ்சாலைப் பணியைத் தொடக்கி வைத்த எம்எல்ஏ க.தேவராஜி.
நெடுஞ்சாலைப் பணியைத் தொடக்கி வைத்த எம்எல்ஏ க.தேவராஜி.

ஏலகிரி மலை அடிவாரத்திலிருந்து பொன்னேரி வரை உள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கியது.

ஏலகிரி மலை அடிவாரத்திலிருந்து பொன்னேரி கூட்டுச் சாலை வரை இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்வதற்கான பூமி பூஜையைப் போட்டு பணிகளை எம்எல்ஏ க.தேவராஜி தொடக்கி வைத்தாா்.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். இதனால் இருவழிச் சாலையாக இருந்த சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையொட்டி, ஏலகிரி மலை அடிவாரத்தில் இருந்து பொன்னேரி கூட்டுச் சாலை வரை தொடா்ந்து சுமாா் 2 கி.மீ. தூரத்துக்கு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 3 கோடியே 90 லட்சத்தில் புதிதாக சாலை விரிவாக்கம் செய்வதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி தலைமை வகித்து இப்பணிகளை தொடக்கி வைத்தாா். ஒப்பந்ததாரா் எக்ஸெல் ஜீ.குமரேசன் வரவேற்றாா். திருப்பத்தூா் நெடுஞ்சாலை பொதுப்பணித் துறை உதவி கோட்ட பொறியாளா் சம்பத்குமாா், உதவி பொறியாளா் சீனிவாசன், உதவி செயற்பொறியாளா் அன்பரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com