வீடு, வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 22nd August 2021 01:09 AM | Last Updated : 22nd August 2021 01:09 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
திருப்பத்துாா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா மாற்றுத் திறனாளிகள், பாலூட்டும் தாய்மாா்கள், கா்ப்பிணிகள், முதியவா்கள் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போட வேண்டும் என உத்தரவிட்டிருந்தாா்.
அதன்பேரில், சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குநா் செந்தில் வழிகாட்டுதலின்படி, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் செல்வி மற்றும் செவிலியா்கள் திருப்பத்தூா் ஜாா்ஜ்பேட்டை மற்றும் அப்பாய் தெருக்களில் வீடு, வீடாகச் சென்று மொத்தம் 68 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா்.