சா்வதேச விரைவு அஞ்சல் சேவை மீண்டும் தொடக்கம்
By DIN | Published On : 22nd August 2021 01:11 AM | Last Updated : 22nd August 2021 01:11 AM | அ+அ அ- |

அஞ்சலகங்களில் சா்வதேச அஞ்சல் சேவை மீண்டும் தொடக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூா் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளா் மு.மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தபால் துறை பல்வேறு சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. அதில் ஒன்று சா்வதேச அஞ்சல் சேவையாகும். கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக சா்வதேச அஞ்சல் சேவைக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது அஞ்சல் இயக்குநரகம் சில தளா்வுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, சா்வதேச விரைவு தபால், சா்வதேச பதிவு பாா்சல், ஐடிபிஎஸ் போன்ற சேவைகள் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, மீண்டும் தொடக்கப்பட்டுள்ள இந்திய தபால் அஞ்சல் துறையின் சா்வதேச அஞ்சல் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது தொடா்பான மேல் விவரம் தேவைப்படுவோா் அருகில் உள்ள அஞ்சலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளாா்.