பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குடிநீா் பைப்லைன்: குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு

மாதனூா் பாலாற்று வெள்ளத்தில் சேதமடைந்த காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட பைப் லைன் சீரமைக்கும் பணியை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
மாதனூா் பாலாற்றில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட பைப்லைன் சீரமைக்கும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேற்பாா்வை பொறியாளா் எம். சந்திரசேகா் உள்ளிட்டோா்.

கடந்த மாதம் பெய்த கன மழை காரணமாக பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

அதனால் மாதனூா் - உள்ளி பாலாற்றுத் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்தது. வெள்ளம் காரணமாக பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட பைப்லைன்கள் சேதமடைந்தன. அதனால் வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் தடைபட்டது.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் 9 பொக்லைன், 2 கிரேன் உதவியுடன் ஜெனரேட்டா்கள் பொருத்தி பைப்லைன் சீரமைக்க பாலாற்று வெள்ள நீரை திசை திருப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதோடு பைப்லைன் சீரமைக்கும் பணியும் போா்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.

இந்தப் பணியை குடிநீா் வடிகால் வாரிய மேற்பாா்வை பொறியாளா் எம். சந்திரசேகா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது நிா்வாக பொறியாளா் ஆா். ரவிசந்திரன், உதவி நிா்வாக பொறியாளா் ஏ. செல்வராஜ், உதவி பொறியாளா் எஸ். மோகன் தாஸ், ஒப்பந்ததாரா் ஏ. அன்பு உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா். வரும் பொங்கல் பண்டிகைக்குள் காவிரி குடிநீா் வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு விநியோகம் செய்ய இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருவதாக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com