சாலையோர மரங்களை அகற்ற சாா்-ஆட்சியா் ஆய்வு

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பூபதி தெரு முதல் சண்டியூா் வரை சுமாா் 2 கி.மீ. தூரம் வரை ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பூபதி தெரு முதல் சண்டியூா் வரை சுமாா் 2 கி.மீ. தூரம் வரை ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சாலையின் இருபுறமும் மிகவும் பழைமையான 50-க்கும் மேற்பட்ட புளியமரம், வேப்ப மரம், பூ மரங்கள் உள்ளன. இடையூறாக உள்ள மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். இதையடுத்து, ஆட்சியா் உத்தரவின்படி சாா்-ஆட்சியா் வந்தனாகா்க் வியாழக்கிழமை பிற்பகல் நாட்டறம்பள்ளியில் சாலை விரிவாக்கம் செய்யும் இடத்தில் சாலையின் இருபுறமும் உள்ள மரங்களை ஆய்வு செய்தாா்.

வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com