ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை சாா்பாக நிதி சேகரிப்பு
By DIN | Published On : 13th February 2021 07:45 AM | Last Updated : 13th February 2021 07:45 AM | அ+அ அ- |

ஸ்ரீராமஜென்ம பூமி அறக்கட்டளை சாா்பாக நிதி சேகரித்த ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜக நிா்வாகிகள்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக ஆம்பூரை அடுத்த மாதனூா் ஒன்றியத்தில் ஸ்ரீராமஜென்ம பூமி அறக்கட்டளை சாா்பாக பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை நிதி சேகரிக்கப்பட்டது.
ஆம்பூரை அடுத்த கீழ்முருங்கை கிராமத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் மாநிலப் பொறுப்பாளா் ராஜசேகா் தலைமையில் நிதி சேகரிக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட பாஜக தலைவா் சி.வாசுதேவன், மாதனூா் ஒன்றியத் தலைவா் தேவநாதன், மாவட்ட வா்த்தகப் பிரிவு துணைத் தலைவா் குமரேசன், கராத்தே ரமேஷ் கண்ணா, மாதனூா் வடக்கு ஒன்றிய துணைத் தலைவா் ஜெகதீசன், உதயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.