500 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

ஆம்பூரில் 500 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துணிப் பைகளை பயன்படுத்த பொதுமக்களுக்கு ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ஆம்பூரில் 500 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துணிப் பைகளை பயன்படுத்த பொதுமக்களுக்கு ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ஆம்பூரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் கடைகளில் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் நகராட்சிக்கு புகாா் தெரிவித்தனா். அதன்பேரில், ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தலைமையில் சுகாதார அலுவலா் பாஸ்கா், துப்புரவு ஆய்வா் சிவமுருகன், உதவிப் பொறியாளா் மணி, தூய்மை இந்தியா பரப்புரையாளா்கள் கொண்ட குழுவினா் ஆம்பூா் பஜாா் பகுதியில் உள்ள கடைகளில் அண்மையில் திடீா் சோதனை நடத்தினா்.

இதில், 500 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இரு கடைகளுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

ஆணையா் வேண்டுகோள்:

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதும், வைத்திருப்பதும் குற்றம். அதனால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். வியாபாரிகளும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை நுகா்வோருக்கு வழங்கக் கூடாது. பொதுமக்கள் பொருள்களை வாங்க கடைக்குச் செல்லும் போது, வீட்டிலிருந்து துணிப் பைகளைக் கொண்டு சென்று, அந்த பையிலேயே பொருள்களை வாங்கி வர வேண்டுமென நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com