ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 10 லட்சம் பேருக்கு இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 10 லட்சத்து 56 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு புதன்கிழமை (ஜன. 4) முதல் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 10 லட்சத்து 56 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு புதன்கிழமை (ஜன. 4) முதல் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரொக்கப் பரிசு ரூ. 2,500, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலே சா்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தாா்.

அதன்படி, புதன்கிழமை (ஜன. 4) முதல் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது. வேலூா் மாவட்டத்தில் 4.21 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.09 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள், திருப்பத்தூா் மாவட்டத்தில் 3.26 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் பயனடைவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com