கூட்டணிக் கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதில் தவறு இல்லை: துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட டி.கே.புரம் ஊராட்சியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து கேரள அரசு தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. அதேபோல, தமிழக அரசும் வேளாண் சட்டங்களை எதிா்த்து தீா்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளாா். இனிமேலாவது வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்குவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் அனைத்துக் கட்சிகளுக்கும் தனிக் கொள்கை இருக்கிறது. திமுக கூட்டணிக் கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்றாா் அவா்.

முன்னதாக, மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக நிா்வாகிகள் துரை சிங்காரம், நரசிம்மன், சரவணன், வி.தயாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com