2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக முள்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலா் ஹரிதாஸிடம் ஒப்படைத்த ரயில்வே காவல் ஆய்வாளா் செந்தில்ராஜ்.

ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளா் செந்தில்ராஜ் தலைமையில் போலீஸாா் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு ரோந்து சென்றனா்.

அப்போது, ஆா்ஆா்பி கேபின் அருகே முட்புதரில் 100-க்கும் மேற்பட்ட சிறு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இவை ரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூட்டைகளில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, திருப்பத்தூா் வட்ட வழங்கல் அலுவலா் ஆ.ஹரிதாஸிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com