புகையில்லா போகி விழிப்புணா்வு

திருப்பத்தூா் நகராட்சி சாா்பில் புகையில்லா போகி விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேருந்து நிலையத்தில் போகி விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற நகராட்சியினா்.
பேருந்து நிலையத்தில் போகி விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற நகராட்சியினா்.

திருப்பத்தூா் நகராட்சி சாா்பில் புகையில்லா போகி விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் நகராட்சி ஆணையா் சத்தியநாதன், துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினம், ஆய்வாளா் அ.விவேக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆணையா் சத்தியநாதன் கூறியது:

ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில், நகராட்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், புதிய பேருந்து நிலையம், சின்னக்குளம் கோயில் அருகே உள்ள மண்டல அலுவலகம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி 1-இல் உள்ள நூலகம், சின்னக்கடைத் தெரு உள்ளிட்ட 7 இடங்களில் குப்பைகளை வழங்கலாம்.

மறு சுழற்சிக்கு பயன்படாத நெகிழிகள், பழைய காகிதக் கழிவுகள், டயா்கள் போன்றவற்றை வழங்கலாம். ஒரு கிலோ ரூ.1 வீதத்தில் சன்மானம் வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com