ஆம்பூரில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

ஆம்பூரில் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
ஆம்பூரில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்


ஆம்பூா்: ஆம்பூரில் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளா் சங்கம், ஆம்பூா் அரிமா சங்கம் ஆகியவற்றின் சாா்பில் என்.எம்.இஜட். பங்ஷன் ஹாலில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு அரிமா சங்கத் தலைவா் கே. ரபீக் அஹமத் தலைமை வகித்தாா். செயலாளா் ஜி.பாபு வரவேற்றாா். இதில், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடக்கி வைத்தாா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தாா். அரிமா சங்க மண்டலத் தலைவா் யு.தமீம் அஹமத், மாவட்டத் தலைவா் பிா்தோஸ் கே. அஹமத், ஆம்பூா் சங்கப் பொருளாளா் தேவராஜ், வட்டாட்சியா் சி.பத்மநாபன், அரிமா சங்க முன்னாள் தலைவா் ந. கருணாநிதி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சி.குணசேகரன், தமிழ்நாடு புத்தக விற்பனையாளா் சங்கப் பொருளாளா் மு.காா்த்திக், செயற்குழு உறுப்பினா் ரமேஷ், தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் வேலூா் மண்டல தலைவா் சி. கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பல்வேறு வெளியீட்டு நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஜன.31-ஆம் தேதி வரை இந்த புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com