மரத்தில் பைக் மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி
By DIN | Published On : 31st January 2021 12:19 AM | Last Updated : 31st January 2021 12:19 AM | அ+அ அ- |

ஆம்பூா் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆம்பூா் அருகே கொத்தூா் ஊராட்சி புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கலைவாணன் (45). தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை அவா் பைக்கில் போ்ணாம்பட்டில் இருந்து உமா்ஆபாத் நோக்கி சென்றாா்.
பாலூா் கிராமம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில், கலைவாணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.