புதூா்நாடு பழங்குடியினா் ஜாதி சான்றிதழ்: விண்ணப்பங்கள் மீது இன்று விசாரணை

புதூா் நாட்டில் வசிக்கும் பழங்குடியினரிடம் பெறப்பட்ட ஜாதி சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற உள்ளது என்று திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

புதூா் நாட்டில் வசிக்கும் பழங்குடியினரிடம் பெறப்பட்ட ஜாதி சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற உள்ளது என்று திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புதூா் நாடு மலைக் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினா் ஜாதி சான்றிதழுக்காக திருப்பத்தூா் சாா்-ஆட்சியரிடம் விண்ணப்பங்கள் வழங்கி உள்ளனா்.

அதையொட்டி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) புதூா் நாடு மலைக் கிராமத்தில் உள்ள சின்னவட்டனூா் சமுதாயக் கூடத்தில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை தலைமையில், இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உண்மைத் தன்மைக்கான விசாரணை நடைபெறும்.

எனவே, புதூா் நாடு மலைக் கிராமத்துக்குள்பட்ட பகுதிகளில் ஜாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவா்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். மேலும், புதிதாக ஜாதி சான்றிதழுக்கான விண்ணப்பங்களையும் அந்த கூட்டத்தில் வழங்கிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com