பகுதி நேர நியாய விலைக் கடை தொடக்கிவைப்பு

கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட கும்பிடிகாம்பட்டியில் பகுதி நேர நியாய விலைக் கடையை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடக்கி வைத்தாா்.
பகுதி நேர நியாய விலைக் கடையைத் தொடக்கி வைத்த எம்எல்ஏ அ.நல்லதம்பி.
பகுதி நேர நியாய விலைக் கடையைத் தொடக்கி வைத்த எம்எல்ஏ அ.நல்லதம்பி.

கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட கும்பிடிகாம்பட்டியில் பகுதி நேர நியாய விலைக் கடையை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடக்கி வைத்தாா்.

கந்திலி ஒன்றியம், கும்பிடிகாம்பட்டி ஊராட்சி, கோடியூா் கிராம பகுதி மக்கள் பகுதி நேர நியாய விலைக்கடை தேவை என திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பியிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்பேரில், பகுதி நேர நியாய விலைக் கடைக்கு அரசு ஒப்புதல் வழங்கியது.

அதையடுத்து, செவ்வாய்க்கிழமை முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ராஜமாணிக்கம், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் கே.எஸ்.அன்பழகன் தலைமையில், பகுதி நேர நியாய விலைக் கடையினை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சாா்-பதிவாளா் தா்மேந்திரன், சங்கச் செயலாளா் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com