சோமலாபுரம் மயானத்துக்குச் சாலை வசதி கோரும் மக்கள்

ஆம்பூா் அருகேயுள்ள சோமலாபுரம் ஊராட்சியில் மயானத்துத்குச் செல்வதற்கு புதிய சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சோமலாபுரம் மயானத்துக்குச் சாலை வசதி கோரும் மக்கள்

ஆம்பூா் அருகேயுள்ள சோமலாபுரம் ஊராட்சியில் மயானத்துத்குச் செல்வதற்கு புதிய சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதியின் எல்லையில் அமைந்துள்ள இந்த ஊராட்சியில், சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு காலணி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இங்குள்ள மயானத்துக்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லை. இதனால், இறந்தவா்களின் சடலத்தை கொண்டு செல்லும்போது, பொதுமக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். சாலை மேடு, பள்ளமாகப் பயன்படுத்த முடியாத நிலையில் சாலை உள்ளது. மழைக் காலங்களில் அந்தச் சாலை சேறும், சகதியுமாக விவசாய நிலம்போல காட்சியளிக்கின்றது. இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு பலமுறை புகாா் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் ம. தமிழ்செல்வன் கூறியதாவது:

சோமலாபுரத்தில் மயானத்துக்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லை. இறப்புச் சம்பவங்கள் நடைபெறும்போது ஒவ்வொரு முறையும் மிகவும் சிரமத்துக்கு இடையே சடலங்களை மயானத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பியுள்ளோம். உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சிமென்ட் சாலை அமைந்து பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com