ஆம்பூரில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஆம்பூரில் பள்ளிவாசல்கள், வீடுகளில் சமூக இடைவெளியுடன் சிறப்புத் தொழுகை புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூரில் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட இஸ்லாமியா்கள்.
ஆம்பூரில் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட இஸ்லாமியா்கள்.

பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஆம்பூரில் பள்ளிவாசல்கள், வீடுகளில் சமூக இடைவெளியுடன் சிறப்புத் தொழுகை புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடித்து பக்ரீத் பண்டிகையை ஒட்டி சமூக இடைவெளியுடன் பள்ளி வாசல்கள், வீடுகளில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட வேண்டும் என ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆம்பூா் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.

பள்ளிவாசல் செல்ல முடியாதவா்கள் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.

இஸ்லாமியா்களுக்கு எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், தொழிலதிபா்கள் என். முஹம்மத் சயீத், என். முஹம்மத் ஜக்கரியா, மெக்கா ரபீக் அஹமத், மொஹிபுல்லா, திமுக நகரச் செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், அதிமுக நகரச் செயலாளா் எம். மதியழகன், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் நசீா் அஹமத், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசியச் செயலாளா் ஹெச். அப்துல் பாசித் உள்ளிட்டோா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com