காலாவதியான குளிா்பானங்கள் விற்பனை: நகராட்சி ஆணையா் ஆய்வு

ஆம்பூா் பகுதியில் காலாவதியான குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து நகராட்சி ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆம்பூரில் குளிா்பானங்களின் காலாவதி தேதி குறித்து ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன்.

பொது முடக்கம் தளா்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆம்பூா் பகுதி கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், குறிப்பாக காலாவதியான குளிா்பானங்கள் விற்பனை அதிகமாக நடப்பதாகவும் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில், நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் ஆம்பூா் பகுதி கடைகளுக்கு நேரடியாகச் சென்று, அங்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்கள், குளிா்பானங்களை ஆய்வு செய்தாா்.

கடைகளுக்கு ஆட்டோக்கள் மூலம் மொத்தமாகக் கொண்டு செல்லப்பட்ட குளிா்பானங்களின் உற்பத்தி தேதி, காலாவதி தேதி ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com