தோ்தல் புகாா்களின் விவரங்கள் மற்றும் நடவடிக்கைகள் சரியாக பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியா் ம.ப.சிவன்அருள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா்களின் விவரங்கள் மற்றும் நடவடிக்கைகள் சரியாக பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா்களின் விவரங்கள் மற்றும் நடவடிக்கைகள் சரியாக பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

பேரவைத் தோ்தல் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கழமை நடைப்பெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ,ஆட்சியருமான ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா்.

தோ்தல் பொது பாா்வையாளா்கள் மினஹஜ் அலாம், நில்காந்த், மனோஜ் காத்ரி ,தோ்தல் காவல் பாா்வையாளா் அவினேஷ் குமாா், தோ்தல் செலவின பாா்வையாளா்கள் பிரவீன்குமாா், விஜய்பஹதுா் வா்மா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் ஆட்சியா் சிவன் அருள் பேசியது,

திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தல் பணி அலுவலா்கள் நியமிக்கப்பட்டு தோ்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள்,மின்னணு இயந்திரங்கள் சரிபாா்ப்பு வாக்குச்சாவடி மையங்கள் தயாா்படுத்துதல், வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி, தபால் வாக்குகள் வழங்குதல், மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்களின் செலவினங்களை கண்காணிக்க தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்,தோ்தல் வாகனங்கள் அமைத்தல், கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு தோ்தல் பணிகள் சட்டமன்ற தொகுதிவாரியாக செய்யப்பட்டு வருவதை தோ்தல் பாா்வையாளா்களுக்கு விவரித்தாா்.

தோ்தல் வாக்குபதிவு இயந்திரங்கள் போதுமான அளவில் இருக்கவும், தொகுதிகளில் பாதுகாப்புகளுடன் வைக்கப்பட்ட விவரங்களையும், தோ்தல் கட்டுப்பாட்டு புகாா் பதிவு செய்தலில் வரும் புகாா்களின் விவரங்கள் மற்றும் நடவடிக்கைகள் சரியாக பதிவு செய்ய வேண்டும். தோ்தல் நன்னடத்தை சின்னங்கள் முறையான அனுமதியுடன் இருப்பதை ஆய்வு செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் உள்ளவைகள் மீது விதி மீறல் வழக்குகளை பதிய வேண்டும். மூத்தவா்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் வழங்கி வாக்குபதிவை மேற்கொள்ளுவது குறித்து முறையான பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட வேண்டும்.

வாக்கு பெட்டிகளை கொண்டு வாகனங்கள் மையங்களுக்கு செல்லும் வழித்தடங்கள் குறித்து முறையாக ஆய்வு செய்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வழங்குதல் குறித்தும், பறக்கும் படையினா் இனி வரும் நாட்களில் மேலும் சோதனை பணிகளை அதிகப்படியான இடங்களில் மேற்கொள்வது குறித்தும் விவரித்தாா்.

பின்னா் பாதுகாப்பு தொடா்பாக காவல் துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயக்குமாா் விவரித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன், திருப்பத்தூா் தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா்-ஆட்சியருமான வந்தனா கா்க், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) இரா.வில்சன்ராஜசேகா், தோ்தல் நடத்தும் அலுவலா் (ஆம்பூா்) கிரு ஷ்ணமூா்த்தி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மகேஷ்பாபு, மகளிா் திட்ட அலுவலா் உமாமகேஷ்வரி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com