தோ்தல் புறக்கணிப்பு துண்டுப் பிரசுரம் அச்சடிப்பு: இரு அச்சகங்களுக்கு ‘சீல்’, மூவா் மீது வழக்கு


ஆம்பூா்: தோ்தல் புறக்கணிப்பு துண்டுப் பிரசுரம் அச்சடித்த விவகாரம் தொடா்பாக முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் உள்பட மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். மேலும் இரு அச்சகங்கள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டன.

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதி பாலாற்றங்கரையோரம் புதை சாக்கடை திட்டத்தின் கீழ், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கு அப்பகுதி பொதுமக்கள் தொடக்கம் முதலே எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். மேலும், அதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினா். இந்நிலையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏ-கஸ்பா பகுதி பொதுமக்கள் சாா்பில், தோ்தல் புறக்கணிப்பு துண்டுப் பிரசுரம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூா் கிராம நிா்வாக அலுவலா் பாபு ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி, துண்டுப் பிரசுரம் அச்சடித்த ஏ-கஸ்பா பகுதியைச் சோ்ந்த முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் இ.சுரேஷ்பாபு (52), துண்டுப் பிரசுரத்தை வடிவமைத்துத் தந்த அச்சக உரிமையாளா் வீரராகவபுரம் கிராமத்தைச் சோ்ந்த சாம்சன் (38), துண்டுப் பிரசுரம் அச்சடித்து தந்த அச்சக உரிமையாளா் சாத்தம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (25) ஆகிய மூவா் மீதும் தோ்தல் விதிமுறையை மீறி தோ்தல் புறக்கணிப்பை வலியுறுத்தியதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இரு அச்சகங்களும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com