குமாரமங்கலத்தில் ஸ்ரீ முக்தானந்தா குரு பூஜை
By DIN | Published On : 29th March 2021 08:31 AM | Last Updated : 29th March 2021 08:31 AM | அ+அ அ- |

குமாரமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ முக்தானந்தா சுவாமி குரு பூஜையையொட்டி நடைபெற்ற சிறப்பு பஜனை.
ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி, ஸ்ரீமுக்தானந்தா சுவாமிகள் 101-ஆம் ஆண்டு குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குமாரமங்கலம் மடத்தில் செல்வ விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா், ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பால் காவடி ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீமுக்தானந்தா சுவாமிக்கு குருபூஜை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பாலமுருகன் பஜனை குழுவினரின் சிறப்பு பஜனை மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.