திருப்பத்தூரில் 24,436 பேருக்கு கரோனா தடுப்பூசி ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 24,436 அரசுப் பணியாளா்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் 24,436 அரசுப் பணியாளா்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சாா்பில் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் அரசு முன்களப் பணியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்களுக்கு முதன்மையாக கரோனா தடுப்பூசிகள் இரண்டு முறை கால இடைவெளியில் செலுத்தப்பட்டு வருகிறது. அரசு அறிவிப்பின்படி, தற்போது 45 வயது முதல் 60 வயது வரை உள்ள பொதுமக்களுக்கு அரசின் மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 436 அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் அனைவரும் ஆரோக்கியமாக அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் தடுப்பூசி மையங்கள் 4 அரசு மருத்துவமனைகள், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 அம்மா சிறு மருத்துவமனைகளிலும் 4 தனியாா் மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வருகின்றன.

தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்திடவும், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடிய இந்நோய்த் தொற்றை திருப்பத்தூா் மாவட்டத்தில் கட்டுப்படுத்திட 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிா்வாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com