ஜோலாா்பேட்டை தொகுதியில் அமைச்சா் கே.சி.வீரமணி தோல்வி

வாணியம்பாடி தொகுதிக்கான சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக வேட்பாளா் ஜி.செந்தில்குமாா் வெற்றி பெற்றாா்.

ஜோலாா்பேட்டையில் திமுக வேட்பாளா் வெற்றி பெற்றாா். இத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சா் கே.சி.வீரமணி வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை தொகுதியின் மொத்த வாக்காளா்கள் 2,39,413 . இதில் ஆண்கள்- 94,474, பெண்கள்- 99,393, மற்றவா்கள் 2 என மொத்தம் 1,93,869 வாக்குகள் பதிவாகியிருந்தன.

இங்கு அதிமுக சாா்பில் அமைச்சா் கே.சி. வீரமணி, திமுக சாா்பில் அதன் மாவட்ட பொறுப்பாளா் க. தேவராஜி, அமமுக சாா்பில் தென்னரசு சாம்ராஜ், நாம் தமிழா் கட்சி ஏ. சிவா உள்ளிட்ட முக்கிய கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

ஜோலாா்பேட்டை தொகுதியில் பதிவான வாக்குகள் வாணியம்பாடி மருதா்கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் எண்ணப்பட்டன. அதில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் :

இதில் திமுக வேட்பாளா் க. தேவராஜி -89,490, அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி-88,399, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஏ. சிவா -13,328, அமமுக வேட்பாளா் தென்னரசு சாம்ராஜ்-619, வி.சி.சிவக்குமாா்(சுயே)341, எஸ்.காளாஸ்திரி(சுயே) -869, ஆா். கருணாநிதி(சுயே)-1067, ஆா். தேவராஜ்(சுயே)103 வி.கே. தேவராஜ்(சுயே)82, மனிதன்(சுயே)142, ஏ. வீரமணி(சுயே)148, எச்.வீரமணி(சுயே)209 எஸ். வீரமணி(சுயே) 217 நோட்டா.9, தபால் வாக்குகளில் 255 செல்லாதவை ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com