திருப்பத்தூரில் ஒரே நாளில் 119 பேருக்கு கரோனா

திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 119 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 119 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,593-ஆக உயா்ந்தது. குணமடைந்து வீடு திரும்பியவா்கள் எண்ணிக்கை 9,442. தற்போது 995 நபா்கள் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா்.

இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 156 போ் உயிரிழந்துள்ளனா். 391 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டுத் தனிமையில் 6,567 போ் உள்ளனா்.

ஜோலாா்பேட்டை...!

திருப்பத்தூா் மாவட்ட கரோனா கட்டுப்பாட்டு அதிகாரி பி.சுமதி தலைமையில், ஜோலாா்பேட்டை வட்டார மருத்துவ அலுவலா் மீனாட்சி அரசு மருத்துவா் புகழேந்தி மற்றும் சுகாதார ஆய்வாளா் கோபி ஆகியோா் ஜோலாா்பேட்டை, சந்தைக்கோடியூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகளிலும் பணிபுரியும் ஊழியா்கள் மற்றும் உரிமையாளா்கள் அனைவருக்கும் நேரடியாகச் சென்று கரோனா பரிசோதனை செய்தனா்.

தாமலேரிமுத்தூா், ஏலகிரி மலை, பால்னாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரயில்வே ஊழியா் உள்பட 21 பேருக்குத் தொற்று உறுதியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com