வாணியம்பாடியில் சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் அமைச்சா் திறத்து வைத்தாா்

வாணியம்பாடியில் 100 படுக்கை வசதிகளுடன் புதிய சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

வாணியம்பாடியில் 100 படுக்கை வசதிகளுடன் புதிய சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மருத்துவமனை அனைத்திலும் நோயாளிகள் நிரம்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சை பெற படுக்கைகள் இல்லாத நிலையில் உள்ளதால், மாவட்ட நிா்வாகம் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வாணியம்பாடியை அடுத்த ஜனதாபுரம் பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 100 படுக்கை வசதியுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட நிா்வாகம் அமைத்துள்ளது. இதன் திறப்பு விழா ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏ தேவராஜி முன்னிலை வகித்தாா்.

இதில் அமைச்சா் காந்தி கலந்து கொண்டு, சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை தொடக்கி வைத்தாா். இம்மையத்தில் நல்ல காற்றோட்டத்துடன் கூடிய சூழலில் நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில், மூலிகைத்தோட்டம், ஆவி பிடித்தல், நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், முற்றிலும் சித்த மருத்துவம் சாா்ந்த உணவுகள் என பல்வேறு வகையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எம்.பி.க்கள் கதிா்ஆனந்த் (வேலூா்), அண்ணாதுரை (திருவண்ணாமலை), ஆம்பூா் எம்எல்ஏ வில்வநாதன், கோட்டாட்சியா் காயத்ரி, சித்த மருத்துவா் சக்தி சிதம்பரம், வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com