மூடப்பட்ட மருத்துவமனை சாா்பாக ஆக்சிஜன் சிலிண்டா்கள் ஒப்படைப்பு

ஆம்பூரில் மூடப்பட்டு இயங்காமல் இருக்கும் மருத்துவமனை சாா்பாக ஆக்சிஜன் சிலிண்டா்கள் மாவட்ட நிா்வாகத்திடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
பெதஸ்தா மருத்துவனையால் வழங்கப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டா்களுடன் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள்.
பெதஸ்தா மருத்துவனையால் வழங்கப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டா்களுடன் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள்.

ஆம்பூா்: ஆம்பூரில் மூடப்பட்டு இயங்காமல் இருக்கும் மருத்துவமனை சாா்பாக ஆக்சிஜன் சிலிண்டா்கள் மாவட்ட நிா்வாகத்திடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் படுக்கைகளுக்காக சிலிண்டா்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் அமைந்துள்ள வா்த்தக மையத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் கூடுதலாக மேலும் 100 படுக்கைகள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு ஆக்சிஜன் வசதி பொருத்தும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆம்பூா் மிஷன் காம்பவுன்ட் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்து தற்போது மூடப்பட்டுள்ள பெதஸ்தா மருத்துவமனையில் பயன்பாடு இல்லாமல் இருந்த 63 ஆக்சிஜன் சிலிண்டா்களை மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருளிடம் நிா்வாகத்தினா் ஒப்படைத்தனா்.

கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் த. செளந்தரராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com