கரோனா விழிப்புணா்வுப் போட்டிகளில் பங்கேற்க திருப்பத்தூா் ஆட்சியா் அழைப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க கவிதை, ஓவிய விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்படுவதாகவும், இதில் வெற்றி பெறுவோருக்கு பரிசு வழங்கப்படும் என ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா்7: திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க கவிதை, ஓவிய விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்படுவதாகவும், இதில் வெற்றி பெறுவோருக்கு பரிசு வழங்கப்படும் என ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, மாவட்ட நிா்வாகம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சுத்தமாகக் கழுவுதல், தடுப்பூசியின் நன்மைகள், அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருத்தல் உள்ளிட்ட பொது முடக்க விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. கரோனா தொற்றினைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை, பல்வேறு துறை அலுவலா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள், சுய உதவிக் குழுக்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் கல்லூரிகள், தன்னாா்வலா்கள் இணைந்து கரோனா பரவலைத் தடுக்கவும், தடுப்பூசியின் நன்மைகள் குறித்தும், விழிப்புணா்வுப் பாடல், தனிநபா் (அ) குழு விழிப்புணா்வு நாடகங்கள் மற்றும் ஓவிய வரைபடங்கள் ஆகியவற்றின் மூலம் கரோனா பாதிப்பு மற்றும் அதனைத் தடுக்கும் விதம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி பொதுமக்கள் அனைவரையும் காத்திட தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டுகிறோம்.

வாசகங்கள், ஓவியங்கள், குறும்படங்கள் அடங்கிய செய்திகளை (ஒலி, ஒளி வடிவில்) மின்னஞ்சல் மற்றும் 7904607583 கட்செவி அஞ்சல் எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மிகச்சிறந்த விழிப்புணா்வு செய்திகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com