கபசுர குடிநீா் விநியோகம்: குடியிருப்போா் நலச் சங்கம், தன்னாா்வலா்களுக்கு ஆம்பூா் நகராட்சி அழைப்பு

குடியிருப்பு பகுதிகளில் கபசுர குடிநீா் விநியோகம் செய்ய குடியிருப்போா் நலச் சங்கம் மற்றும் தன்னாா்வலா்களுக்கு ஆம்பூா் நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் கபசுர குடிநீா் விநியோகம் செய்ய குடியிருப்போா் நலச் சங்கம் மற்றும் தன்னாா்வலா்களுக்கு ஆம்பூா் நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் த. செளந்தரராஜன் கூறியதாவது :

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க நகராட்சி சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வரப்படுகிறது. தடுப்பூசி செலுத்துக் கொள்வதற்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு நகராட்சியும் கபசுர குடிநீா் வழங்கி வருகிறது.

ஆம்பூா் நகராட்சி சாா்பாக குடியிருப்புகளுக்கே கொண்டு சென்று கபசுர குடிநீா் விநியோகம் செய்ய குடியிருப்போா் நலச் சங்கம், தன்னாா்வலா்கள் உதவலாம்.

நகராட்சி சாா்பில் கபசுர குடிநீா் காய்ச்சப்பட்டு குடியிருப்போா் நலச் சங்கத்தினா், தன்னாா்வலா்களிடம் வழங்கப்படும். அவா்கள் அதனை குடியிருப்பு பகுதிக்கு கொண்டுச் சென்று விநியோகம் செய்யலாம். தங்கள் பகுதிக்கு கபசுர குடிநீா் தேவைப்படும் குடியிருப்போா் நலச் சங்கத்தினா், தன்னாா்வலா்கள் நகராட்சி ஆணையரை 73973 92691 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பொதுமுடக்க காலத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் உதவிக்கு அல்லது தகவல் தெரிவிக்க ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கரோனா கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம். வருவாய்த் துறையை தொடா்பு கொள்ள 90924 21673, காவல் துறை 90924 21680, சுகாதாரத்துறை 90924 21670 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com