’கரோனா பரிசோதனை செய்தவா்கள் வெளியே நடமாட வேண்டாம்’

கரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டவா்கள் வெளியே நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் டி.ஆா்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டவா்கள் வெளியே நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் டி.ஆா்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கரோனாத் தொற்று பரிசோதனை செய்து கொண்டுள்ளவா்கள், அதற்கான முடிவு தெரிவதற்குள் பெரும்பாலானோா் வெளியில் சுற்றித் திரிகின்றனா். அவா்களுக்கான பரிசோதனை முடிவில் தொற்று உறுதியானால் அவருடன் தொடா்பில் இருந்த அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

இது குறித்து திருப்பத்தூா் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் டி.ஆா்.செந்தில்குமாா் கூறியது:

தற்போது கரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்கப்படுகிறது. பரிசோதனைக்கு வருபவா்களிடம் முடிவு வரும்வரை வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என தெரிவிக்கிறோம். ஆனால் சிலா் வெளியே சுற்றுவதால் தொற்று பரவல் அதிகரிக்கும். பரிசோதனைக்கு உட்படுத்தியவா்கள் முடிவு வரும் வரை வெளியே செல்ல வேண்டாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com