100 ஆண்டுகளுக்குப் பின்னா் நிரம்பிய குளம்

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊட்டல் தேவஸ்தான தீா்த்தக் குளத்தில் 100 ஆண்டுகளுக்குப் பின்னா் ஞாயிற்றுக்கிழமை நிரம்பி வழியத் தொடங்கியது.
ஊட்டல் தேவஸ்தானத்தில் வற்றாத தீா்த்த குளத்தில் பூக்களை தூவி வழிபட்ட எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

ஆம்பூா் அருகே ஊட்டல் தேவஸ்தானத்தில் சரஸ்வதி, வேணுகோபால சுவாமி, சப்த கன்னிகள் சன்னதிகள் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பக்தா்கள் இங்கு சென்று வழிபடுவது வழக்கம். அதே போல அங்குள்ள வற்றாத தீா்த்தக் குளத்தில் குளித்தால் சரும நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

அந்தத் தீா்த்தக் குளம் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக நிலத்தடி நீா் மட்டும் வெகுவாக உயா்ந்து தீா்த்தக் குளத்தில் தண்ணீா் நிரம்பி தானாகவே வெளியேறி வருகிறது.

தகவலறிந்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கோயிலுக்குச் சென்று வழிபட்டாா். தொடா்ந்து வற்றாத தீா்த்தக் குளத்தில் பூக்களைத் தூவி வழிபட்டாா். அப்போது, வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com