தினமணி செய்தி எதிரொலி: கிராமங்களுக்கு மின் விநியோகம்

தினமணி செய்தி எதிரொலியாக, ஆம்பூா் அருகே கிராமங்களில் 3 நாள்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.
வடபுதுப்பட்டு கிராமத்தில் தற்காலிக ஏற்பாடாக மின்சார விநியோகம் செய்ய ஆலோசனை நடத்திய ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை கிராமங்களுக்கு ஆம்பூா் அருகே சோமலாபுரம் ஊராட்சியில் உள்ள துணை மின் நிலையத்தலிருந்து பாலாற்றில் மின்கம்பங்கள் அமைத்து அதன் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

பெரு வெள்ளம் காரணமாக பாலாற்றில் இருந்த சுமாா் 15 மின்கம்பங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதால் மின் விநியோகம் 3 நாட்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து தினமணியில் ஞாயிற்றுக்கிழமை செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் அந்த கிராமத்துக்குச் சென்று ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில் ஊா் பொதுமக்கள், மின்வாரிய அதிகாரிகள், ரயில்வே துறையினா், காவல் துறையினா் கலந்து கொண்டனா். தற்காலிக ஏற்பாடக மாற்றுப் பாதையில் மின் விநியோகம் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை கிராமங்களுக்கு மின்சார விநியோகம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com