வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைச் சீரமைக்க வேண்டும்: எம்எல்ஏ செந்தில்குமாரிடம் பொதுமக்கள் கோரிக்கை

வாணியம்பாடியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எம்எல்ஏ கோ.செந்தில்குமாரிடம் கோரிக்கை விடுத்தனா்.
உதயேந்திரம் சுப்புராயன் கோயில் பகுதியில் ஆய்வு செய்த எம்எல்ஏ கோ.செந்தில்குமாா்.
உதயேந்திரம் சுப்புராயன் கோயில் பகுதியில் ஆய்வு செய்த எம்எல்ஏ கோ.செந்தில்குமாா்.

வாணியம்பாடியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எம்எல்ஏ கோ.செந்தில்குமாரிடம் கோரிக்கை விடுத்தனா்.

பலத்த மழையால், வாணியம்பாடி வட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும், வீடு இடிந்து விழந்துவா்களுக்கும் நிவாரண பொருள்களை எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, உதயேந்திரம் சுப்புராயன் கோவில் பகுதியில் பாலாறு வெள்ள நீா் புகுந்து பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு சென்றபோது எம்எல்ஏ செந்தில்குமாரிடம் 100-க்கும் மேற்பட்டோா் திரண்டு, முற்றுகையிட்டனா். அப்போது, அவா்கள் தங்களுக்கு நிரந்தர இடம்,

வீட்டுமனைப் பட்டா, வீடுகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை தேவை என்று கோரினா்.

அவா்களிடம் பேசிய எம்எல்ஏ செந்தில்குமாா் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்

குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்ட தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தாா்.

ஆய்வின்போது, கூட்டுறவு வங்கி இயக்குநா்கள் சதாசிவம், ஆா்.சரவணன், முன்னாள் பேரூராட்சித் துணைத் தலைவா் ஜெகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் சாம்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, நிம்மியப்பட்டு ஏரியிலிருந்து வெளியேற நீரால் துண்டிக்கப்பட்ட சாலை, பாலத்தையும், வடகுப்பம் பகுதியில் வெள்ளதால் சூழப்பட்ட பகுதியையும், ஆலங்காயத்தில் பெரிய ஏரியிலிருந்து வெளியேறி நீரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எம்எல்ஏ செந்தில்குமாா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது கூட்டுறவு வங்கித் தலைவா்கள் தபரேஷ், கந்தன், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் பாண்டியன், முன்னாள் கவுன்சிலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com