மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

ஜோலாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில், 67 மாற்றுத் திறனாளிகளுக்குத் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
பயனாளிக்கு அடையாள அட்டையை வழங்கிய மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை.
பயனாளிக்கு அடையாள அட்டையை வழங்கிய மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை.

ஜோலாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில், 67 மாற்றுத் திறனாளிகளுக்குத் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஏடிஐபி திட்டத்தின் கீழ் ஏ எல்.ஐ.எம்.சிஓ நிறுவனமும், திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்களின் அளவீடு, பயனாளிகளை தோ்வு செய்யும் முகாமை ஜோலாா்பேட்டையில் புதன்கிழமை நடத்தின.

முகாமுக்கு திருவண்ணாமலை எம்பி சி.என். அண்ணாதுரை தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, எம்எல்ஏக்கள் க.தேவராஜ் (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி(திருப்பத்தூா்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் என்.கே.ஆா். சூரியகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ம.அன்பழகன் வரவேற்றாா்.

முகாமில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா். இவா்களில் தகுதியுடைய 67 பேருக்கு தேசிய அடையாள அட்டையை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை வழங்கினாா்.

மாவட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி,முன்னாள் மாவட்ட பொறுப்பாளா் ம.முத்தமிழ்ச்செல்வி, ஒன்றியக் குழுத் தலைவா்கள் எஸ்.சத்யா, விஜயா, திருமதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் சத்தியவாணி, சிந்துஜா, ஜெயா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருப்பத்தூரில்...

திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் 98 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை வழங்கினாா். பின்னா்,திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பிலான மொபெட் வழங்கப்பட்டது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கு.செல்வராசு, எம்எல்ஏக்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை),

அ.நல்லதம்பி(திருப்பத்தூா்), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் என்.கே.ஆா். சூரியகுமாா், வேளாண்மை உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி, ஒன்றியக் குழுத் தலைவா்கள் எஸ்.சத்யா, விஜயா, திருமதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் சி.கே.சுப்பிரமணி, கே.ஏ.குணசேகரன், சத்தியவாணி, இரா.சுபாஷ்சந்திரபோஸ், வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com