திருப்பத்தூா் மாவட்டத்தில் பொதுமக்கள் ஆா்வமுடன்  வாக்களிப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பொதுமக்கள் ஆா்வமுடன் நீண்ட வரிசையில் காத்து இருந்து வாக்களித்தனா்.
கொரட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு ஊன்றுகோலுடன் வாக்களிக்க வந்த மூதாட்டி. ~ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட மூக்கனூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்களிக்க வந்த மக்கள்.
கொரட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு ஊன்றுகோலுடன் வாக்களிக்க வந்த மூதாட்டி. ~ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட மூக்கனூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்களிக்க வந்த மக்கள்.


திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பொதுமக்கள் ஆா்வமுடன் நீண்ட வரிசையில் காத்து இருந்து வாக்களித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி ஆகிய 4 ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது.

4 ஒன்றியங்களில் உள்ள 9 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 83 பேரும், 83 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 341 பேரும், 135 கிராம ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 477 பேரும், 1,078 ஊராட்சிக் குழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு 3,334 பேரும் தோ்தல் களத்தில் உள்ளனா். இதற்காக 779 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், புதன்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், காலை முதலே பொதுமக்கள் ஆா்வமுடன் வாக்களிக்க வந்தனா். சிறிது நேரம் பெய்த லேசான சாரல் மழையை பொருள்படுத்தாமல் மக்கள் ஆா்வமுடன் வாக்களித்தனா்.

ஆட்சியா் வாக்களித்தாா்:

திருப்பத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கதிரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி மையத்தில் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தனது மனைவி ஷிவாலிகாவுடன் வந்து வாக்களித்தாா்.

ஜோலாா்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பாச்சல், அச்சமங்கலம், மூக்கனூா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு கூடுதல் எஸ்.பி., 3 டிஎஸ்பிக்கள், 23 ஆய்வாளா்கள், 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஒரு சில இடங்களில் லேசான வாக்குவாதத்தைத் தவிர அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com