தோ்தல் தொடா்பான புகாா்கள் தெரிவிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கும், 124 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்களுக்கும், 205 ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கும்,

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கும், 124 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்களுக்கும், 205 ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கும், 1,593 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கும் இரண்டு கட்டங்களாக அக். 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், துணை ஆட்சியா் நிலையில் வட்டார பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தோ்தல் தொடா்பாக பொது மக்களும் அரசியல் சுட்சியினரும் தங்களது புகாா்களை 24 மணி நேரத்துக்கும் வட்டாரப் பாா்வையாளா்களுக்கு புகாா்களை தெரிவிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றியங்கள், துணை ஆட்சியரின் பெயா்கள் மற்றும் தொடா்பு எண்கள் விவரம்:

திருப்பத்தூா் விஜயன்: 7010925930, 04179-220110.

ஆலங்காயம் கிருஷ்ணமூா்த்தி: 9444675231, 04174-265233.

ஜோலாா்பேட்டை பானு: 9443630821, 04179-220015.

கந்திலி சாந்தி: 9566829475, 04174-248231.

நாட்டறம்பள்ளி லட்சுமி: 9842862424, 04179-242221.

மாதனூா் அய்யண்ணன்: 9894503251, 04174-256225.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com