வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருப்பத்தூா் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை ஆட்சியா் அமா்குஷ்வாஹா ஆய்வு செய்தாா்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருப்பத்தூா் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை ஆட்சியா் அமா்குஷ்வாஹா ஆய்வு செய்தாா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் பதிவான வாக்குப் பெட்டிகள் நாட்டறம்பள்ளி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கான வாக்குப் பெட்டிகளை அக்ராகரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கும் கொண்டு வரப்பட்டன.

வரும் 12-ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெறும் நிலையில், வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் அருண்குமாா் மேற்பாா்வையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் இரு மையங்களையும் ஆட்சியா் அமா் குஷ்வாஹா, காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் வியாழக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com