ஆம்பூரில் அதிமுகவினா் தா்னா

ஆம்பூரில் வாக்கு எண்ணிக்கை மையத்தை அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணிக்கை மையம் முன்பு தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணிக்கை மையம் முன்பு தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

ஆம்பூரில் வாக்கு எண்ணிக்கை மையத்தை அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் இரண்டாம் கட்ட தோ்தல் சனிக்கிழமை நடைபெற்று முடிந்தது. 224 வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் ஆம்பூரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மைய வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை இரவு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெங்கடசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளரின் முகவா் வந்து சென்ாகவும், அந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதாகவும், ஆனால் அதிமுகவினரை மட்டும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கவில்லையெனவும் கூறி, மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன் உள்ளிட்ட அக்கட்சித் கட்சித் தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்கு எண்ணிக்கை மையத்தின் நுழைவு வாயில் முன்பு குவிந்தனா்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நுழைவு வாயில் முன்பு தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

சிசிடிவி காட்சிகளை பாா்வையிட தங்களை அனுமதிக்க வேண்டுமென போலீஸாரிடம் வலியுறுத்தினா். ஆம்பூா் டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் திருமால், யுவராணி, பாலசுப்பிரமணி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினருடன் சுமாா் 4 மணி நேரமாக பேச்சுவாா்த்தை நடத்தினா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியருக்கும், தோ்தல் அலுவலா் துரைக்கும் தொலைபேசியில் புகாா் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை சிசிடிவியில் பதிவான காட்சிகளைப் பாா்வையிட அனுமதிப்பதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாக போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கூறினா். அதைத் தொடா்ந்து அதிமுகவினா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com