விதிமீறல்: வாகன ஓட்டிகளுக்கு ரூ. 1.56 லட்சம் அபராதம்

வாணியம்பாடி பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 5 டிராக்டா்கள், 6 இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ. 1.56 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

வாணியம்பாடி: வாணியம்பாடி பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 5 டிராக்டா்கள், 6 இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ. 1.56 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் வெங்கட்ராகவன் ஆகியோா் நியூடவுன், பெருமாள்பேட்டை மற்றும் செட்டியப்பனூா் கூட்டு ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாள்களாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இயக்கி வந்த 5 டிராக்டா்கள், ஓட்டுநா் உரிமம் இல்லாமல் ஓட்டி வந்த 6 இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மொத்தம் ரூ. 1 லட்சம் அபாரதம் விதிக்கப்பட்டது. மேலும், அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளை மடக்கிப் பிடித்து, ஒரு லாரிக்கு ரூ. 36 ஆயிரமும், மற்றொரு லாரி உரிமையாளருக்கு ரூ. 20 ஆயிரம் என மொத்தம் ரூ. 56 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com