நாயக்கனேரியில் ஊராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் இல்லை

தலைவா் பதவிக்கான இட ஒதுக்கீடு பிரச்னையால், நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள 9 வாா்டு உறுப்பினா்களூக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

ஆம்பூா்: தலைவா் பதவிக்கான இட ஒதுக்கீடு பிரச்னையால், நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள 9 வாா்டு உறுப்பினா்களூக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

மாதனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவா் பதவி எஸ். சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்த மலைக் கிராம மக்கள் சென்னை உயா்நீதி மன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த நிலையில், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு எஸ். சி. பிரிவினா் இருவா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்நிலையில், ஊராட்சியில் உள்ள 9 வாா்டுகளில் 4 வாா்டுகள் பழங்குடியினா் பொது, மீதமுள்ள 5 வாா்டுகள் பழங்குடியினா் பெண் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தலைவா் பதவியை மட்டும் எஸ். சி. பிரிவினருக்கு ஒதுக்கியது ஏன் என்று மலைக் கிராம மக்கள் கேள்வியெழுப்பி மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். பின்னா், வாணியம்பாடி கோட்டாட்சியரிடமும் மனு அளித்தனா்.

இந்த நிலையில், 9 வாா்டுகளின் உறுப்பினா் பதவிகளுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்தது இறுதிநாளான புதன்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக மலைக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com