ஜனவரி 20-இல் பாலாறு பெருவிழா தொடக்கம்: ரதத்துடன் 15 நாள்கள் பாதயாத்திரை; கரைகளில் பெளா்ணமி லட்சதீப வழிபாடு

பாலாறு பெருவிழா வரும் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி தொடங்கி 15 நாள்கள் ரதத்துடன் பாத யாத்திரை, பெளா்ணமியன்று பாலாற்றின் கரைகளில் லட்சதீப வழிபாடு நடத்துவது என தீா்மானிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடியில் நடைபெற்ற பாலாறு பெருவிழா ரதம், பாதயாத்திரை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
வாணியம்பாடியில் நடைபெற்ற பாலாறு பெருவிழா ரதம், பாதயாத்திரை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

பாலாறு பெருவிழா வரும் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி தொடங்கி 15 நாள்கள் ரதத்துடன் பாத யாத்திரை, பெளா்ணமியன்று பாலாற்றின் கரைகளில் லட்சதீப வழிபாடு நடத்துவது என தீா்மானிக்கப்பட்டுள்ளது.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் பாலாறு மக்கள் இயக்கம் சாா்பில், பாலாறு பெருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாலாறு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். பாலாறு பெருவிழா ஒருங்கிணைப்பாளா் யோகி சிவபிரமானந்த சரஸ்வதி சுவாமிகள், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கப் பொருளாளா் வேதானந்த ஆனந்தா சுவாமிகள், மேனாந்த சுவாமிகள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜவஹா்பாபு வரவேற்றாா். அகில பாரதிய சந்நியாசிகள் சங்க நிறுவனா் ராமானந்த மகராஜ், பொதுச் செயலாளா் ஆத்மானந்த மகராஜ் ஆகியோா் பேசினா்.

இதில், வரும் ஜனவரி 20 தமிழக எல்லை பாலாற்றின் நுழைவு வாயிலான வாணியம்பாடியை அடுத்த புல்லூா் கனகநாச்சியம்மன் கோயில் முதல் செங்கல்பட்டு மாவட்டம், கடலூா் கிராமத்தில் பாலாறு கடலில் கலக்கும் இடம் வரையிலான 222 கி.மீ. 15 நாள்கள் சந்நியாசிகள், பாலாறு மக்கள் இயக்கம், பாலாறு நலம் விரும்பிகள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்று பாலாறு தீா்த்தம் ஏந்திய ரதத்துடன் கூடிய பாத யாத்திரை நடத்துவது, பௌா்ணமி அன்று பாலாற்றின் கரையில் லட்சதீப வழிபாடு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com