விவசாயிகள் மறியல்: 114 போ் கைது

மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 48 பெண்கள் உள்பட 114 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
காஞ்சிபுரம் தேரடி அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
காஞ்சிபுரம் தேரடி அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.

காஞ்சிபுரம்: மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 48 பெண்கள் உள்பட 114 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடி பகுதியில் அகில இந்திய விவசாய சங்கங்களின் போராட்டக் குழு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் கே.நேரு தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மூா்த்தி, கமலநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் சங்கா், சாரங்கன், எல்.முருகேசன், செளந்தரி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து 48 பெண்கள் உள்பட 114 பேரை ஏ.டி.எஸ்.பி.சாந்தாராம் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com