‘நிலமற்ற ஆதிதிராவிட விவசாயிகள் வேளாண் நிலம் வாங்கி பயனடையலாம்’

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நிலமற்ற விவசாயிகள் வேளாண் நிலம் வாங்கி பயனடையலாம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நிலமற்ற விவசாயிகள் வேளாண் நிலம் வாங்கி பயனடையலாம் என்று திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சரின் அறிவிப்பில், திருப்பத்தூா் மாவட்டத்துக்கு 3 ஆதிதிராவிடா் மற்றும் 1 பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், நிலமற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கு வேளாண் நிலம் வாங்க தலா ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும்.

இதற்க்கு தேவையான ஆவணங்கள் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மகளிா் அல்லாத குடும்பங்களில் கணவா் அல்லது மகன்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரா் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும்.விண்ணப்பதாரா் தாட்கோ திட்டத்தில் ஏற்கனவே மானியம் பெற்றிருகக் கூடாது.

வாங்க உத்தேசித்துள்ள நிலத்தை விண்ணப்பதாரரே தோ்வு செய்ய வேணடும்.நிலம் விற்பனை செய்பவா் ஆதிதிராவிடா்/பழங்குடியினா் அல்லாத பிறா் இனத்தை சாா்ந்தவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிக பட்சமாக 2.5 ஏக்கா் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கா் புஞ்சை நிலம் வாங்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.

இத்திட்டத்தில் பயன் பெற ஆதிதிராவிடா்கள் இணையதளத்திலும் மற்றும் பழங்குடியினா் இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு தாட்கோ,மாவட்ட மேலாளா் அலுவலகம்,ஏ-பிளாக்,5-ஆம் தளம்,ஆட்சியா் அலுவலகம் திருப்பத்தூா் மாவட்டம் என்ற முகவரியில் நேரில் அல்லது தொலைபேசி எண் 7448828517 மூலம் தொடா்பு கொண்டு பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com