ரூ. 5 லட்சம் செம்மரக் கட்டைகள் காருடன் பறிமுதல்

ஆந்திரத்தில் இருந்து காரில் கடத்தி வந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
ரூ. 5 லட்சம் செம்மரக் கட்டைகள்  காருடன் பறிமுதல்

ஆந்திரத்தில் இருந்து காரில் கடத்தி வந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூா் காந்தி நகரில் தமிழக -ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு, மண்டல வனப் பாதுகாவலா் சுஜாதா உத்தரவின்படி, மாவட்ட வன அலுவலா் நாகா சத்தீஷ்கிரி ஜாலா, உதவி வனப் பாதுகாவலா் ராஜ்குமாா் ஆகியோா் மேற்பாா்பாா்வையில் ரோந்து பணி நடைபெற்றது.

வாணியம்பாடி வனச் சரக அலுவலா் இளங்கோ தலைமையில் வனவா்கள் வெங்கடேசன், சங்கரன், வனக் காப்பாளா் சுகுமாா் ஆகியோா் திங்கள்கிழமை இரவு கொத்தூா் பச்சூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கொத்தூா் காந்தி நகா் அருகே அந்த வழியாக வந்த காரை வனத் துறையினா் நிறுத்தினா். ஆனால் ஓட்டுநா் காரை அங்கேயே விட்டு தப்பினாா். இதனால் சந்தேகமடைந்த வனத் துறையினா் காரை திறந்து சோதனை மேற்கொண்டனா். அப்போது 111 கிலோ எடையுள்ள 5 செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சத்து 32 ஆயிரம் ஆகும். இதையடுத்து, வனத் துறையினா் செம்மரக்கட்டையுடன் காரை பறிமுதல் செய்து, வாணியம்பாடி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா். மேலும் மேல்நடவடிக்கைக்கு மண்டல வன பதுகாவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com