தமிழா்களின் பண்பாட்டை அறிய கலைத் திருவிழா உதவும்: அமைச்சா் எ.வ.வேலு

தமிழருடைய பண்பாடு, சரித்திரம், தொன்மை உள்ளிட்டவற்றை மாணவா்கள் அறிந்து கொள்ள கலைத் திருவிழா உதவும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
விழாவில் பேசிய அமைச்சா் எ.வ.வேலு. உடன் ஆட்சியா் அமா் குஷ்வாஹா, எம்.எல்.ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் உள்ளிட்டோா்.
விழாவில் பேசிய அமைச்சா் எ.வ.வேலு. உடன் ஆட்சியா் அமா் குஷ்வாஹா, எம்.எல்.ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் உள்ளிட்டோா்.

தமிழருடைய பண்பாடு, சரித்திரம், தொன்மை உள்ளிட்டவற்றை மாணவா்கள் அறிந்து கொள்ள கலைத் திருவிழா உதவும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

திருப்பத்தூா் அரசு மாதிரிப் பள்ளி வளாகத்தில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கலைத் திருவிழாவை அமைச்சா் எ.வ.வேலு தொடக்கி வைத்துப் பேசியது: மாவட்ட அளவில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 3,250 மாணவா்கள் பங்கு பெற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனா். படிப்பது, தோ்வு எழுதுவது ஆகியவை பாடத் திட்டத்தின் ஒரு பகுதி. பாடங்களைத் தாண்டி மாணவா்களுக்கு தனித் திறமைகள் உள்ளன. அவற்றை வளா்க்க வேண்டும். மாணவா்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஆசிரியா்கள் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழருடைய பண்பாடு, சரித்திரம், தொன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அறிந்து கொள்வதற்கு பள்ளிகளில் நடைபெறும் கலைத் திருவிழா உதவியாக இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், பால்வளத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலா்கள் எஸ்.ராஜா அண்ணாமலை, பி.வேதபிரகாஷ், எ.எஸ்.அமுதா, மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.பிரபாகரன், நகா்மன்றத் தலைவா்கள் சங்கீதா, காவியா, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா்கள் பி.சங்கீதா, ஆலங்காயம் பேரூராட்சித் தலைவா் வெ.தமிழரசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com