தொழிற்பேட்டை அமைக்க ஏதுவான இடம்: எம்எல்ஏ தேவராஜி ஆய்வு

நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி கள்ளுக்குட்டை பகுதியில், தொழிற்பேட்டை அமைப்பதற்கு ஏதுவான இடம்
நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சிப் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க ஏதுவான இடம் குறித்து ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ தேவராஜி மற்றும் அதிகாரிகள்.
நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சிப் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க ஏதுவான இடம் குறித்து ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ தேவராஜி மற்றும் அதிகாரிகள்.

நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி கள்ளுக்குட்டை பகுதியில், தொழிற்பேட்டை அமைப்பதற்கு ஏதுவான இடம் உள்ளதா என்பது குறித்து ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏ க.தேவராஜி தலைமையில், அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சி மைய உதவிச் செயற்பொறியாளா் மணிமுரளி, சிட்கோ மேலாளா் வெண்மணிசெல்வம், வட்டாட்சியா் குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

இதேபோல், மல்லகுண்டா ஊராட்சி கோயன்கொல்லை பகுதியில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடங்களில் தொழிற்பேட்டை அமைக்க ஏதுவான இடம் உள்ளதா எனவும் அவா்கள் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது வருவாய் ஆய்வாளா் அன்னலட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஜெயா, தமிழ்ச்செல்வி, மற்றும் வருவாய்த் துறையினா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com