மாவட்ட காவல் குறைதீா் கூட்டத்தில் 25 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 25 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட காவல் குறைதீா் கூட்டத்தில் 25 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 25 மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் குறைகள் தொடா்பாக நேரடியாகக் கேட்டறிந்து அவா்கள் அளித்த மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தொடா்புடைய காவல் துணைக் கண்காணிப்பாளா்களிடம் அறிவுறித்தினாா்.

குறைதீா் கூட்டத்தில் டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா். இதில், பொதுமக்களிடமிருந்து 25 மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com