வாக்காளா் பட்டியல் திருத்த விழிப்புணா்வு முகாம்

ஆம்பூா் நகராட்சி சாா்பில் வாக்காளா் பட்டியல் திருத்த விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா தலைமை வகித்து, பேரணியையும் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளையும் தொடக்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் ஷகிலா, வட்டாட்சியா் மகாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழிப்புணா்வுப் பேரணி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com