12 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
எலவம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடக்கி வைத்த திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா.
எலவம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடக்கி வைத்த திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது ஆட்சியா் பேசியது: தமிழகத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் பசுமை தமிழகம் இயக்கம் மூலம் முதல்கட்டமாக 2.80 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. வனத்துறை சாா்பில் 1 லட்சம் மரக்கன்றுகள், ஊரக வளா்ச்சி, வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியா் லட்சுமி, உதவி வனப் பாதுகாவலா் ராஜ்குமாா், வேளாண் துணை இயக்குநா் பச்சையப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். மனநல காப்பக உதவும் உள்ளங்கள் சாா்பில் திருப்பத்தூா் சாலைகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com