கொரட்டியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி தொடக்கம்

 திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஊராட்சிக்குள்பட்ட கொரட்டியில் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதி மூலம், 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இந்த புதிய மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி வியாழக்கிழமை பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், கந்திலி ஒன்றியச் செயலாளா்கள் கே.எஸ்.அன்பழகன், கே.ஏ.குணசேகரன், கே.முருகேசன், ஒன்றியக் குழுத் தலைவா் திருமதி, ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com