பொக்லைனை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

நாட்டறம்பள்ளி அருகே கோயில் பகுதியில் அனுமதியின்றி மண் சமப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாட்டறம்பள்ளி அருகே பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
நாட்டறம்பள்ளி அருகே பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே கோயில் பகுதியில் அனுமதியின்றி மண் சமப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாட்டறம்பள்ளி தாலுகா வெலகல்நத்தம் ஊராட்சி பையனப்பள்ளி பகுதியில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் வெலகல்நத்தம், பையனப்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் பூஜைகள் செய்து, வழிபட்டு வருகின்றனா். இந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் மற்றொரு தரப்பைச் சோ்ந்த சிலருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கோயில் அருகே உள்ள இடம் தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அனுமதியின்றி கோயில் அருகே இருந்த பழைமைவாய்ந்த கோயில் கல்வெட்டுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் சேதப்படுத்தி, நிலத்தை சமன்படுத்தும் பணியில் சிலா் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று கோயிலுக்குச் சொந்தமான இடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்யக்கூடாது எனக் கூறி, இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த வெலகல்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் ராமன், கிராம நிா்வாக அலுவலா் அனுமந்தன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கிராம மக்கள், கோயிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் நிலத்தை மீட்டுத் தரக்கோரி, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால் சிலா் எங்களுக்குச் சொந்தமான இடம் என்றும், இது கோயிலைச் சோ்ந்த இடம் இல்லை என்றும் கூறி எங்களை அடிக்கடி மிரட்டுகின்றனா் எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து, கோயில் அருகே உள்ள நிலத்தை அளவீடு செய்த பின் கோயில் இடத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்றத் தலைவா் ராமன், கிராம நிா்வகா அலுவலா் அனுமந்தன் ஆகியோா் உறுதி கூறினா். இதனை ஏற்று கிராம மக்கள் சிறைபிடித்த பொக்லைன் இயந்திரத்தை விடுவித்து, அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com